"நான் முட்டாள் அல்ல ஒரு புத்திசாலித்தனமான சர்வாதிகாரி !" – டொனால்ட் ட்ரம்ப் !
எனது புத்திசாலித்தனத்தை நிரூபிக்கத் நான் ஒரு குறிப்பிட்ட மருத்துவத் தேர்வை எழுத விரும்புவதை மருத்துவரிடம் தெரிவித்துள்ளேன்!
"விமர்சகர்கள் என்னை 'முட்டாள்' என்று அழைப்பதைத்தான் நான் உலகிலேயே அதிகம் வெறுக்கிறேன்; மாறாக என்னை ஒரு 'புத்திசாலித்தனமான கொடுங்கோல் சர்வாதிகாரி' என்று அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அதிரடியாகப் பேசியுள்ளார். நியூயோர்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனது ஆதரவாளர்களின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய ட்ரம்ப் இவர் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
நாட்டின் நுகர்பொருள் விலைவாசி மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து பேசுவதற்காகவே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், தனது வழக்கமான பாணியில் அரசியல் விவாதங்களுக்குத் தாவிய ட்ரம்ப், அங்கு கூடியிருந்த மக்களிடம், "நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய மனிதர்களில் நான்தான் மிகவும் புத்திசாலி உங்கள் நாட்டின் ஜனாதிபதியாக ஒரு புத்திசாலித்தனமான நபர் இருப்பதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள்?"
தொடர்ந்து பேசிய அவர், தனது மனத்தகுதி குறித்து ஊடகங்கள் விமர்சித்தபோது, தனது மருத்துவரிடம் தான் பேசிய உரையாடலை வெளிப்படுத்தினார். "அவர்கள் என்னை 'முட்டாள்' என்று மிக மோசமாக வசைபாடினார்கள். அப்போது நான் என் வைத்தியரிடம், 'டாக்டர், அவர்கள் என்னை ஒரு புத்திசாலித்தனமான சர்வாதிகாரி என்று கூப்பிட்டால் கூட எனக்குக் கவலையில்லை, ஆனால் முட்டாள் என்று கூப்பிடுவதை என்னால் சகித்துக்கொள்ள முடியாது' என்று கூறினேன்" என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதற்கு அவர் 'காக்னிட்டிவ் டெஸ்ட்' எனப்படும் அறிவாற்றல் பரிசோதனையை பரிந்துரைத்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். தனது பதவிக்காலத்தில் இந்தத் தேர்வை தான் மூன்று முறை எழுதி, மூன்றிலும் முழு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜான் கார்ட்னர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ட்ரம்பின் அறிவாற்றல் திறன்கள் நாளுக்கு நாள் "மோசமடைந்து" வருவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறை தலைவர் பீட் ஹெக்செத் ட்ரம்பின் ஆரோக்கியத்தைப் பாராட்டியுள்ளதுடன், அமெரிக்கா நீண்ட காலத்திற்குப் பிறகு கண்ட மிகக் கூர்மையான மற்றும் நுண்ணறிவுமிக்க முப்படைகளின் தளபதி ட்ரம்ப் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


