Breaking News
செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 16ஆம் நாள். 283 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில்279 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தம் 283 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 279 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 16ஆம் நாள் இன்று நிறைவடைந்த நிலையில், அங்கு வருகை தந்திருந்த ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இந்தத் தகவல்களை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.


