வட மாகாண கராத்தே போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாம்பியன்!
.
வட மாகாண கராத்தே போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாம்பியன்
வட மாகாண கராத்தே போட்டியின் 20 வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவில் (Under-20 Girls), கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி K. ஷாலினி Kumite (+50 கிலோகிராம்) பிரிவில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவ்வெற்றியின் மூலம் தனது பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள மாணவி K. ஷாலினி அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், மாகாண மட்டப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவி K. ஷாலினி அவர்களுக்கும், அவரை திறம்படப் பயிற்றுவித்து வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய பயிற்றுவிப்பாளர் தர்ஷன் அவர்களுக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி சமூகத்தினர் தமது உளமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய மட்டப் போட்டிகளிலும் சிறந்து விளங்கி பல வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்.


