நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்டு கண்டன அமைதிப் பேரணி!
பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தமது துக்கத்தையும், அமைதியான வழியிலான அறப்போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்டு கண்டன அமைதிப் பேரணி!
அதிகாரத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நம் தொப்புள்கொடி உறவான திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (என்கிற) குட்டி பலியாகியிருப்பது நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு காவல் துறையின் இந்த ஈவிரக்கமற்ற செயலுக்குப் பின்னால் உறைந்துபோயிருக்கிறது ஒரு குடும்பத்தின் கண்ணீரும், நம் சமூகத்தின் ஆற்றாமையும். இது ஒரு தனிமனிதனுக்கான இழப்பு மட்டுமல்ல; நம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அநீதி.
நெஞ்சில் ஈரமும் தார்மீகக் கோபமும் கொண்ட நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள் நீதிகேட்டு வீதிக்கு வந்து கண்டன அமைதிப் பேரணி ஒன்றை 14 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) பொபினி நகரசபை (Bobigny Mairie) முன்றலிலிருந்து பொபினி காவல் நிலையம் (Bobigny Police Station) வரை நடத்தியிருந்தனர். பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தமது துக்கத்தையும், அமைதியான வழியிலான அறப்போராட்டத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
- காணொளி : https://youtu.be/U7Cm3MsllL0
- நீதிக்காகக் காத்திருக்கும் உறவுகள்.


