பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை - பொதுமக்கள் தகவல் - அல்லைப்பிட்டியில் இருவர் பொலிசாரால் கைது!
,
பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை - பொதுமக்கள் தகவல் - அல்லைப்பிட்டியில் இருவர் பொலிசாரால் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்துவந்த இருவர் பொதுமக்களின் தகவலுக்கமைய இன்று அல்லைப்பிட்டி பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.குறித்த கைதின்போது இருவரிடமிருந்தும் 5200 மில்லிக்கிராம் மற்றும் 5000 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.சுமார் 45 மற்றும் 49 வயதுடைய அல்லைப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இன்று (16) ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் கூறுகையில் -
வேலணை பிரதேசத்தில் குறித்த இருவரும் மாடு திடுட்டு,களவு மற்றும் போதைப்பொருள் விற்பபை உள்ளிட்ட சமூகவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக தகவல் கிடைக்கப்பப்பெற்று வந்தது.
இன்நிலையில் இன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் ஊர்காவற்றுறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தலைமையில் முன்னெடுக்கப்பட விசேட நடவடிக்கையின் போது அல்லைப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து ஒருவரும் அல்லைப்பிட்டி தேவாலய பகுதியில் வைத்து ஒருவருமாக இருவர் கைது செய்துப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஐஸ் போதையும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதனிடையே தீவகப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு செயற்படும் நபர்களது தகவல்களை அச்சமின்றி வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிசார் கோரியுள்ளனர்.


